விபத்தை ஏற்படுத்திவிட்டு வெளிநாடு தப்பியோடிய சாரதி கைது!

கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்தின் பின்னர் வௌிநாட்டிற்கு தப்பிச்சென்றிருந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் மீண்டும் நாடு திரும்பிய போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

கடந்த 10ஆம் திகதி கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் சொகுசு காரொன்று முச்சக்கரவண்டியை மோதி விபத்துக்குள்ளாக்கியதில், முச்சக்கரவண்டியின் சாரதி உயிரிழந்தார்.

காரை செலுத்திய குறித்த சந்தேகநபர் அன்றைய தினமே துபாய்க்கு தப்பிச் சென்றிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேகநபருக்கு எதிராக வௌிநாட்டு பயணத் தடை பெறப்பட்டிருந்த நிலையில், சந்தேகநபர் நேற்றிரவு(12) மீண்டும் நாடு திரும்பிய சந்தர்ப்பத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 26 வயதான சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Articles

Latest Articles