‘விமர்சித்தவர்கள் தற்போது வாய்மூடி மௌனம்’ – ஜீவன் சீற்றம்

மலையக பல்கலைக்கழகம் அமைப்பதற்கான இடமும் அதற்கு தேவையான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, பல்கலைக்கழகம் வரவில்லை என விமர்சித்தவர்கள் தற்போது வாய் மூடி மொளனம் காக்கின்றனர் – என்று இராஜாங்க அமைச்சார் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

கொட்டகலை பகுதியில் இன்று நடைபெற்ற அபிவிருத்தி நிகழ்வில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கொட்டகலை கடந்த 4 வருடங்களாக மறக்கப்பட்டிருந்தது. அபிவிருத்திகளை மேற்கொண்டால் அதன் பெயர் தொண்டமானுக்கு சென்று விடும் என்ற அச்சமே இதற்கு காரணம். மலையக பல்கலைக்கழகத்திற்கான இடமும் அதற்கு தேவையான பணமும் ஒதுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகம் வரவில்லை என விமர்சித்தவர்கள் ஏன் இப்போது வாழ்த்த மறுக்கின்றனர்.

தற்போது மலையகத்தில் வீட்டுத் திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நான் அமைச்சை பொறுப்பேற்கும் போது கொவிட் நிலைமை இலங்கையிலும், உலகத்திலும் பாரிய அச்சுறுத்தலாக காணப்பட்டது. இவ்வாறான நிலைமையில் மக்கள் மிகுந்த பொறுமையுடன் உள்ளனர். இவ்வாறான நிலையிலும் அரச இயந்திரம் இயங்குகின்றது. கொரோனாவின் அச்சுறுத்தல் மலையகத்தை பாதித்துள்ளது. ஆயிரம் தொடர்பிலேயே பேசுகின்றனர்.

தொழிலாளர்களின் ஏனைய பிரச்சினைகள் காணாமல் போயுள்ளது. தோட்ட தொழில் கௌவமற்றது என நினைப்பது தவறு. மாறாக அதை செய்விக்கின்ற முறைமையே தவறானது. தோட்ட தொழில்துறையை நவீனமயப்படுத்தி கௌவித்தால் அந்த துறையை பாதுகாக்க முடியும். மலையக கல்வித் தரம் வீழ்ச்சிக்கு வழங்கல் இல்லாமையே பிரதான பிரச்சினை. சுகாதார வழிமுறைகளை முறையாக கைக்கொள்வதன் மூலமே கொவிட் தொற்றை மலையகத்திலிருந்து ஒழிக்க முடியும்.’ என்றார்.

க.கிசாந்தன்

Related Articles

Latest Articles