விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

சுமார் 75 மில்லியன் ரூபா பணம் மற்றும் சொத்துக்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் சாட்சி விசாரணை நவம்பர் 8-ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

பிரதிவாதியான விமல் வீரவன்ச நீதிமன்றில் ஆஜராகவில்லை எனவும், பிரதிவாதி சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி சவேந்திர பெர்னாண்டோ, அவர் சுகயீனமுற்றுள்ளதாகவும் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

இதன்படி, வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்ட நீதிபதி, பிரதிவாதியின் சுகவீனம் குறித்த மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.

Related Articles

Latest Articles