விராட் கோலியின் 9 மாத குழந்தைக்கு அச்சுறுத்தல் விடுத்த சந்தேகநபரான பொறியியலாளர் கைது!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலியின் ஒன்பது மாத மகளுக்கு அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் மென் பொறியியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

தெலங்கானா மாநிலம் சங்கராரெட்டி பகுதியைச் சேர்ந்த 23 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருபதுக்கு20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் 10 விக்கெட்டுக்களால் தோல்வி அடைந்தது.

இதனையடுத்து, இந்திய கிரிக்கெட் வீரர் மொஹமட் ஷமிக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

எனினும், விராட் கோலி இதனைக் கண்டித்து மொஹமட் ஷமிக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

விராட் கோலியின் ஆதரவைத் தொடர்ந்து ட்விட்டரில் நபரொருவர் கோலியின் 09 மாத குழந்தைக்கு மிரட்டல் விடுத்திருந்தார்.

இதனையடுத்து, இது தொ்டர்பில் காவல்துறைக்கு அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்நிலையிலேயே, குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Articles

Latest Articles