விரைவில் மாகாணசபைத் தேர்தல்: பிரதமர் அறிவிப்பு

மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்குரிய சூழ்நிலையை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்கும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

மாகாணசபைத் தேர்தலை அடுத்த வருடம் மார்ச் மாதம் நடத்துமாறு இந்திய வலியுறுத்தியுள்ளது எனக் கூறப்படுகின்றது. இது உண்மையா? தேர்தலை நடத்துவதற்குரிய அரசாங்கத்தின் வேலைத்திட்டம் என்ன என்று எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பிரதமர் மேலும் கூறியவை வருமாறு,

” தேசிய மக்கள் சக்தி அரசாங்கமென்பது தேர்தலை நடத்துவதற்கு பின்வாங்கும் தரப்பு அல்ல. ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் இரு தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன.

எல்லை நிர்ணய அறிக்கை நிராகரிக்கப்பட்டதாலேயே மாகாணசபைத் தேர்தலை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. குறித்த அறிக்கையை மீளாய்வு செய்து நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதற்குரிய செயற்பாடு ஆரம்பமாகியுள்ளது.

தேர்தல் திகதி பற்றி எம்மால் கூற முடியாது. அதனை தேர்தல் ஆணைக்குழுவே தீர்மானிக்கும். அதற்குரிய சூழ்நிலையை நாம் ஏற்படுத்திக்கொடுப்போம்.” – என்றார்.

Related Articles

Latest Articles