” வற் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. பொருட்களின் விலைகளும் மும்மடங்காக அதிகரித்துள்ளது. ஆனால் தோட்டத் தொழிலாளர்களுக்கு மட்டும் சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. இது விடயத்தில் நிதி அமைச்சு தலையிட்டு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (11) இது தொடர்பில் கருத்து வெளியிட்ட வேலுகுமார் எம்.பி.,
‘ அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் வைத்தியர்களுக்கும் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 2021 ஆம் ஆண்டுமுதல் ஆயிரம் ரூபாவே வழங்கப்பட்டுவருகின்றது.
வற் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. பொருட்களின் விலைகளும் எகிறியுள்ளன. எனவே, நிதி அமைச்சு தலையிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்றார்.
