விளையாட்டுத்துறை அமைச்சராகிறார் எஸ்.பி. திஸாநாயக்க?

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்படக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

உடன் அமுலுக்கு வரும் வகையில் ரொஷான் ரணசிங்கவை அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி இன்று நடவடிக்கை எடுத்தார்.

இதன்படி விளையாட்டுத்துறை, இளைஞர் விவகாரம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பதவிகளில் இருந்து ரொஷான் ரணசிங்க நீக்கப்பட்டுள்ளார்.

தற்போது மேற்படி அமைச்சுகள் ஜனாதிபதி வசம் உள்ளன. ஒரிரு நாட்களின் பின்னர் எஸ்.பி. திஸாநாயக்க அப்பதவிக்கு நியமிக்கப்படக்கூடும் என தெரியவருகின்றது.

Related Articles

Latest Articles