‘விளையாட்டு’ வினா விடைப் போட்டி – பதுளை பிரதேச செயலக அணி முதலிடம்! (படங்கள்)

பதுளை மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களுக்கு இடையிலான ‘விளையாட்டு’ தொடர்பிலான பொது அறிவு வினா விடைப் போட்டியின் இறுதிப் போட்டியும், பரிசளிப்பு விழாவும் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தலைமையில் ஊவா மாகாண கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு, ஊவா மாகாண விளையாட்டுத் திணைக்களம் மற்றும் பதுளை மாவட்ட செயலகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இச்சுற்றுப்போட்டியில் ஒவ்வொரு பிரிவிலிருந்தும் 15 அணிகள் பங்கேற்றன.

இதில் பதுளை பிரதேச செயலக அணி சம்பியன் பட்டத்தையும், பண்டாரவளை பிரதேச செயலக அணி இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன. மேலும் பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் மாகாண விளையாட்டு அமைச்சின் செயலாளர் நிஹால் குணரத்ன, மாகாண விளையாட்டுப் பணிப்பாளர் கீர்த்தி திஸாநாயக்க மற்றும் அதிகாரிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles