யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நாளை 14ஆம் திகதியும் மறுநாள் 15 ஆம் திகதியும் நடைபெறவுள்ள 38 ஆவது, பட்டமளிப்பு விழாவில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 4 விழிப்புல வலுவிழந்த மாணவர்கள் பட்டம் பெறவுள்ளனர்.
P ஸ்ரீதரன் யோகதாஸ் மொழி பெயர்ப்புக் கற்கையில் சிறப்புக் கலை மாணிப் பட்டத்தையும், பொன்னம்பலம் தீபன், கலாமோகன் பிரகான் ஆகி யோர் இந்து நாகரிகத்தில் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தையும்,திருமதி பிரகான் வானுஜா பொதுக் கலை மாணிப் பட்டத்தையும் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.