சிறுபோகத்தில் உரம் கொள்வனவு செய்வதற்காக விவசாய அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள வவுச்சர்களுக்கான செல்லுபடிகாலத்தை எதிர்வரும் டிசம்பர் இறுதிவரை நீடித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
பல்வேறு விவசாய சங்கங்கள் முன்வைத்துள்ள வேண்டுகோளுக்கிணங்க இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள விவசாயிகளுக்கு தற்போது உரத்தைக் கொள்வனவு செய்ய வேண்டிய அவசியம் கிடையாததன் காரணத்தால் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில் அம்பாறை, வடக்கின் பல்வேறு பிரதேசங்கள் மற்றும் வடமத்திய மாகாணத்திலும் தற்போது சிறுபோக நெல் அறுவடை இடம்பெற்று வருவதாகவும் அதனால் அங்குள்ள விவசாயிகளுக்கு தற்போது உரத்திற்கான அவசியம் கிடையாது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.










