இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் விவசாய குடும்பங்களுக்கு நெற்செய்கைக்காக 50 கிலோகிராம் எடையுடைய 3 இலட்சத்து 75 ஆயிரம் உர மூடைகளை வழங்க உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளது.
ஒரு ஏக்கருக்கும் குறைவான நிலப்பரப்பில் நெற்செய்கையினை மேற்டகொள்ளும் விவசாயிகளுக்கு இவ்வாறு தலா 50 கிலோகிராம் எடைகொண்ட யூரியா உரத்தினை வழங்க இணக்கம் தெரிவிகக்கப்பட்டுள்ளது.
உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் அதிகாரிகளுக்கும் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவிற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த உரத்தில் எதிர்வரும் வாரத்தில் ஆயிரம் மெட்றிக் டொன் உரம் நாட்டிற்கு கிடைக்கப்பெறவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் குறைந்த வருமானம் பெறும் 14 இலட்சம் குடும்பங்களுக்கு தலா 18 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி தொகையொன்று வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்ககப்பட்டுள்ளது.










