சர்வதேச நாணய நிதியத்துக்கு முன்னதாகவே சென்றிருக்க வேண்டும் என்பதை தான் நம்புவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அத்துடன், விவசாயிகளுக்கு இரசாயன உரம் பெற்றுக் கொடுக்கப்படாமை தவறு எனவும் தான் கருதுவதாகவும், அவற்றை மீண்டும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.