வீடுகளில் இடம்பெற்ற அனர்த்தங்களில் இரு சிறார்கள் பரிதாபகரமாக உயிரிழப்பு

கொங்கிறீட்டால் வடிவமைக்கப்பட்ட ஒட்டகச்சிவிங்கி சிலையொன்று உடைந்து விழுந்ததில் 8 வயது சிறுவனனொருவர் உயிரிழந்துள்ள பரிதாபகரமான சம்பவம் ஹெட்டிபொல , திக்கலகெதர பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த சிறுவன் வீட்டு முற்றத்தில் விளையாடிக்கொண்டிருக்கையிலேயே , சிலை சிறுவன்மீது விழுந்து இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

இதனால் படு காயமடைந்த சிறுவன் குளியாப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதேவேளை, நீர்த்தாங்கி தலையில் வீழ்ந்து மூன்றரை வயது சிறுமியொருவர் உயிரிழந்த பெருந்துயர் சம்பவம் பொலன்னறுவை – அரலகங்வில  பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

ஹிருணி ரஷ்மிகா தேவி என்ற மூன்றரை வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் தனது மூத்த சகோதரியுடன் வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது தான் நீராட வேண்டும் என்று தனது தந்தையிடம் கூறியுள்ளார்.

பின்னர், இந்த சிறுமி நீராடுவதற்காக குளியலறைக்கு சென்றுள்ள நிலையில் குளியலறையின் மேற்கூரையில் இருந்த நீர்த் தாங்கி தலையில் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles