வீடுகளில் சிகிச்சைபெறும் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பு

நாட்டில் கொவிட் -19 தொற்றுக்குள்ளானவர்களில் 109,373 பேருக்கு வீடுகளிலேயே சிகிச்சையளிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர்.

தற்போதும் 3,813 தொற்றாளர்கள் வீடுகளிலேயே சிகிச்சைபெற்று வருகின்றனர். வீடுகளில் சிகிச்சைபெறும் தொற்றாளர்களிள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் வீடுகளில் சிகிச்சையளிக்கும் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அயந்தி கருணாரத்ன தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,கொவிட் -19 தொற்றாளர் எண்ணிக்கை தீவிரமாக அதிகரித்து வந்தமையின் காரணமாக வைத்தியசாலை கட்டமைப்பில் ஏற்பட்ட நெருக்கடியை சமாளிப்பதற்காக கடந்த ஜூன் மாதம் முதல் வீடுகளிலேயே சிகிச்சையளிக்கும் முறைமை ஆரம்பிக்கப்பட்டது.

இந்த முறைமையின் கீழ் இதுவரையில் 109, 373 தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. தற்போதும் 3,813 தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles