வீடொன்றினுள் பலவந்தமாக நுழைந்து ஒருவர் அடித்து கொலை! பதுளையில் சம்பவம்

வீடொன்றினுள் பலவந்தமாக நுழைந்த குழு ஒன்று அங்கிருந்த நபர் ஒருவரை அடித்து கொலை செய்துள்ளதாக தெரியவருகிறது.

பதுளை, லிதமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரும்பு கம்பியால் குறித்த நபர் தாக்கப்பட்டுள்ளததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தாக்குதலில் பலத்த காயமடைந்த நபரை பதுளை வைத்தியசாலையில் அனுமதித்த சந்தர்ப்பத்தில் உயிரிழந்திருந்ததாக தெரியவருகிறது.

பதுளை, லிதமுல்ல பகுதியை சேர்ந்த 65 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது..

சம்பவம் தொடர்பில் பதுளை பகுதியை சேர்ந்த 21, 24 மற்றும் 31 வயதுடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Related Articles

Latest Articles