மேல் மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.இராஜேந்திரன், பொதுத்தேர்தலில் இம்முறை கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றார்.
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபியின் வீணை சின்னத்திலேயே அவர் களமிறங்குகின்றார்.
மேல் மாகாணசபை உறுப்பினராக இவர் பதவி விகித்த காலகட்டத்தில், மேல் மாகாணத்தில் தமிழ் சாகித்திய விழாவை நடத்தி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.










