வீதிகளில் அதிக புகை வெளியிடும் வாகனங்கள் குறித்து முறையிடுங்கள்

அதிக புகையை வெளியிடும் வாகனங்கள் குறித்து திணைக்களத்துக்கு தெரிவிப்பதற்காக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் மாசு சோதனை பிரிவு, சிறப்பு வாட்ஸ்அப் தொடர்பு விவரங்களை (0703500525) வெளியிட்டுள்ளது. அதிக புகையை வெளியிடும் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்கள், அரச வாகனங்கள் மற்றும் பொலிஸ் வாகனங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாலேயே, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பஸ்டியன் மாவத்தையிலுள்ள தனியார் பஸ் மாசு கசிவு குறித்து ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதாக DMT பணிப்பாளர் நாயகம் ஊடகங்களுக்கு தெரிவித்தார். கடந்த மாதம் நடத்தப்பட்ட சோதனையில், 40%க்கும் அதிகமான பஸ்கள் புகை பரிசோதனையில் தோல்வியடைந்தன. பழுதடைந்த வாகனங்களை 14 நாட்களுக்குள் வெரஹெர தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி, உரிய ஆய்வுகளை மேற்கொண்டு, தவறுகளை சரி செய்ய வேண்டும். இல்லையெனில், அத்தகைய வாகனங்களின் வருவாய் உரிமம் பறிக்கப்படும்.

அத்துடன் கடந்த சில ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகளைத் தொடர்ந்து புகையை வெளியிடும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“வேரஹெர அலுவலகத்துக்கு வராத மாசு உமிழ்வு சோதனையில் தோல்வியடைந்த வாகனங்களுக்கு முதற்கட்ட அறிவிப்பு வெளியிடப்படும். பின்னர் நினைவூட்டலை மதிக்காத பட்சத்தில் இரண்டாவது நினைவூட்டல் வெளியிடப்படும். பின்னர் உரிமங்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles