மகா சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறிமலையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு விசேட குழு அமைக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் முன் வைக்கப்பட்ட கோரிக்கையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டார்.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பான உண்மைகளைக் கண்டறிந்து, தேசிய நல்லிணக்கத்துக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகள் எதிர்காலத்தில் இடம்பெறாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொளள்ளப்பட வேண்டும் என்றும் அமைச்சரால் ஜனாதிபதியிடம் வலியுறுத்தப்பட்டது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று முன்தினம் மாலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
வெடுக்குநாறிமலையில் பொலிஸார் செயற்பட்ட விதம் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.