வெனிசுலாவின் இறைமை பாதுகாக்கப்பட வேண்டும்: போப் லியோ வலியுறுத்து

வெனிசுலா நாட்டின் இறையாண்மை, சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று போப் லியோ வலிறுத்தியுள்ளார்.

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்க படைகள் கைது செய்துள்ளது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ரோம் நகரின் செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் திரண்டிருந்த மக்களிடையே போப் லியோ உரையாற்றினார்.

“ இந்த இக்கட்டான சூழ்நிலையில் வெனிசுலாவில் அமைதி திரும்பவும், அந்நாட்டின் தன்னாட்சி அதிகாரம் பாதுகாக்கப்பட வேண்டும்.” என்று போப் லியோ வலியுறுத்தினார்.

“ புவிசார் அரசியல் நிலைகளைவிட வெனிசுலா மக்களின் நலன் அனைத்தையும் விட மேலானதாக இருக்க வேண்டும்.
வன்முறையை கைவிட்டு விட்டு நாடு அமைதி மற்றும் நீதியில் பயணிக்க வேண்டும்.” எனவும் அவர் கூறினார்.

இந்த நெருக்கடியால் வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள மனிதாபிமான மற்றும் சட்ட ரீதியான பாதிப்புகள் போப் லியோ கவலை தெரிவித்தார்.

 

Related Articles

Latest Articles