2ஆவ போட்டியிலும் மேற்கிந்திய தீவுகள் வீழ்த்தி ஒருநாள் தொடரையும் இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணி, இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது.
இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இலங்கை, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்தது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. மழை காரணமாக ஆட்டம் 44 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, 36 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 189 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
இதையடுத்து 190 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த இலங்கை 38.2 ஓவர்களில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 190 ரன் எடுத்து வெற்றி பெற்றதுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது.
இரு அணிகளுக்கும் இடையிலான 3வது ஒருநாள் போட்டி வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ளது.