ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை மீண்டும் பலப்படுத்துவது தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீவிரமாக ஆராய்ந்துவருகின்றது. மேற்படி கூட்டமைப்புக்கு கடந்த காலங்களில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியே தலைமைத்துவம் வழங்கியது. எனினும், மொட்டு கட்சி உதயமான பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வலுவிழந்தது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சின்னம் வெற்றிலை சின்னமாகும். மஹிந்தவுக்கு பிரதான தேர்தல்களின்போது வெற்றியை தேடிக்கொடுத்த சின்னமாகும். இதனால்தான் வெற்றியின் சின்னம் வெற்றிலை சின்னம் என்று மஹிந்த ராஜபக்ச அடிக்கடிகூறிவந்தார்.
சுதந்திரக்கட்சி தற்போது பலவீனமடைந்து, மொட்டு கட்சியிடம் சரணடைந்துள்ளது. இந்நிலையில்தான் கூட்டணியை பலப்படுத்துவதற்கான முயற்சியில் அக்கட்சி இறங்கியுள்ளது. இது தொடர்பில் கடந்தவாரம் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை பலப்படுத்துவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனராம்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் அங்கம் வகித்தது. எனவே, புதிய கூட்டணியில் அக்கட்சி இணையுமா என்ற வினா எழுந்துள்ளது.