இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான அணிகளுக்கு இடையில் 3ஆவதும் கடைசியுமான ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகின்றது. முற்பகல் 9.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.
3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றிபெற்றது. இரண்டாவது போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றது. இதனால் பங்களாதேஷ் – இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் 1-1 என சமனில் உள்ளது.
எனவே, இன்றைய போட்டியில் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகின்றது.
இன்றைய போட்டியில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் டில்சான் மதுஷங்க விளையாடமாட்டார்.
பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டாவது சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அவர் உபாதைக்குள்ளானமையினால் போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.