இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்றாவது டி-20 போட்டி இன்று நடைபெறுகின்றது.
இலங்கை நேரப்படி இன்றிரவு 7 மணிக்கு, தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் போட்டி நடைபெறும்.
பாகிஸ்தான் அணி மூன்று டி20 போட்டிகளில் விளையாட இலங்கைக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது.
இரு அணிகளுக்கும் இடையேயான 2வது ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.
இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்ல பாகிஸ்தான் அணியும், போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய இலங்கை அணியும் தீவிரம் காட்டிவருகின்றன.










