வெலிசறை விபத்தில் படுகாயங்களுக்குள்ளான மேலுமொருவர் உயிரிழப்பு

வெலிசறை, மஹபாகே பிரதேசத்தில் கடந்த 4ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த 17 சிறுவன் உயிரிழந்துள்ளாா்.

இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த இந்த வருடம் உயர் தரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளாா்.

16 வயது சிறுவனால் ஓட்ப்பட்ட கார் ஒன்று வெலிசறை பிரதேசத்தில் மேலும்சில வாகனங்களுடன் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றிருந்தது.

இந்த விபத்தின்போது, மோட்டாா் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த குறித்த பாடசாலை மாணவன் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்துள்ளாா். உயிரிழந்த மாணவன் பயணித்த மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சிசென்ற அவரின் உறவினரான 52 வயது நபர் விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளாா். அவர் முன்னாள் இராணுவ சிப்பாய் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 16 வயது சிறுவன் மற்றும் அவரின் தந்தை ஆகியோா் வத்தளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனா்.

மஹபாகே பிரதேசத்திலுள்ள தங்க ஆபரண வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான குறித்த அதிசொகுசு காரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதுடன் அவரின் மகனே இந்த காரை ஓட்டியுள்ளாா்.

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles