வெலிமடை –சாப்புக்கடை மீன் விற்பனையாளருக்கு கொரோனா தொற்று ஊர்ஜிதமாகியதினால் குறிப்பிட்ட மீன் விற்பனை நிலையத்தில் கடந்த மூன்று தினங்களாக மீன் கொள்வனவு செய்தவர்களின் விபரங்கள் கோரப்படுகின்றன.
இதன்படி 27-10-2020, 28-10-2020, 29-10-2020 ஆகிய மூன்று தினங்களில் மேற்படிமீன் விற்பனைநிலையத்தில் மீன் கொள்வனவுகளை மேற்கொண்டவர்கள் உடனடியாக பதுளை பொதுசுகாதாரப் பிரிவினர் மற்றும் வெலிமடைப் பொலிஸ் நிலையத்தினர் ஆகியோருடன் தொடர்புகொள்ளுமாறுகேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தவறின் பகுதி சுகாதார சேவை பணியகத்தின் 057-2245178 ஆகியதொலைபேசி இலக்கத்துடன் உடனடியாக தொடர்புகொண்டு விபரங்களை தெரிவிக்கவும்.
அத்துடன் குறிப்பிட்ட மீன் விற்பனையாளருக்கு கொரோனாதொற்று அறிகுறிகள் தென்பட்டதினால் அவருக்குபி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதற்கமைய அவருக்கு இன்று 29-10-2020ல் கொரோனாதொற்றுஉறுதிப்படுத்தப்பட்டது.
குறிப்பிட்ட நபருக்கு எவ்வகையில் கொரோனா தொற்று ஏற்பட்டதென்பது குறித்து தீவிரபுலன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
கொரோனா தொற்றளரான மீன் வர்த்தகர் கொழும்பு ஐ.டி.எய்ச். மருத்துவமனைக்கு இன்று கொண்டுசெல்லப்பட்டார்.
எம். செல்வராஜா பதுளை