வெலிமடை அம்பகஸ்தோவ பகுதியில் இன்று (27) இரண்டு தனியார் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்து வெலிமடை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் 7 பெண்களும் 4 ஆண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெலிமடை அம்பகஸ்தோவ வீதியின் தரகல பகுதியில் முன்னோக்கிச் சென்று கொண்டிருந்த பேரூந்து பின்னால் வந்து கொண்டிருந்தமற்றைய பேரூந்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பண்டாரவளை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் களுபஹனவின் பணிப்புரையின் பேரில், அம்பகஸ்தோவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம்.எஸ்.கே ரத்நாயக்க தலைமையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ராமு தனராஜா