வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள பாதாள குழு உறுப்பினர்களுக்கு வலை!

பாதாள குழுவினருக்கு தற்போது அரசியல் பாதுகாப்பு கிடைக்காததாலேயே வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்றுள்ளனர் எனவும், அவர்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது எனவும் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் பொலிஸ்மா அதிபர் கூறியவை வருமாறு,

” பாதாள குழுவினருக்கு கடந்த காலங்களில் அரசியல் பாதுகாப்பு இருந்துள்ளது. அந்த அரசியல் பாதுகாப்பு இல்லாமல்போனதையடுத்தே அவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்றனர். அங்கிருந்தவாறு இலங்கையில் குற்றச்செயல்களை வழிநடத்தினர்.

பொலிஸில் உள்ள சிலரும் பாதாள குழுக்களுடன் தொடர்பை வைத்திருந்தனர். அதுவும் இல்லாமல்போன நிலையிலேயே வெளிநாடு சென்றனர்.

பாதாள குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு வெளிநாட்டு தொடர்பு அவசியம். எனவே, வெளிநாட்டு தூதகரங்களுடன் பொலிஸார் சிறந்த உறவை பேணிவருகின்றனர். நம்பிக்கையையும் பொலிஸார் பெற்றுள்ளனர். மக்களின் நம்பிக்கையையும் கட்டியெழுப்பி வருகின்றோம்.

இந்தோனேசிய தூதுரகம், இந்தோனேசிய பொலிஸார் மற்றும் இந்திய புலனாய்வு அமைப்பின் ஒத்துழைப்பு மதிக்கின்றோம். அதன்காரணமாகவே இவர்களை கைது செய்ய முடிந்தது.

டுபாய், ஓமான், ரஷ்யா, பெலாருஸ் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் தலைமறைவாகி உள்ளவர்களையும் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.

கைது செய்யப்பட்டவர்களில் ஐவருக்கு சிறப்பு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்தது. பெண்ணொருவம் கைதாகியுள்ளார். மொத்தம் ஆறுபேர்.” – என்றார்.

Related Articles

Latest Articles