வெளிநாடு செல்லும் இலங்கை பெண்களின் வீதத்தில் அதிகரிப்பு

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக நாட்டில் இருந்து வெளியேறுபவர்களில் ஆண்களின் வீதம் தொடர்ந்து ஏறு வரியையை காட்டி நின்ற நிலையில் பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் மீண்டும் வெளியேறும் பெண்களின் வீதத்தில் அதிகரித்த போக்கை வெளிப்படுத்துவதாக ஆய்வுகளின் ஊடாக தெரியவந்துள்ளது.

2000 ஆம் ஆண்டில் வேலைவாய்ப்பின் நிமித்தம் சவூதி, கட்டார் போன்ற மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஏனைய நாடுகளுக்கு சென்றவர்களில் 67 வீதமானோர் பெண்களாகவும் 33 வீதமானோர் ஆண்களாகவும் காணப்பட்டுள்ளனர்.

2008 ஆம் ஆண்டு வரையில் வெளியேறுபவர்களில் அதிகளவானோர் பெண்களாக காணப்படுவதை தரவுகள் தெளிவாக சுட்டிக்காட்டுகின்றன. 2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் நாட்டை விட்டு வெளியேறுபவர்களில் அதிகளவானோர் ஆண்கள் என பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து வேலைவாய்ப்பிற்காக நாட்டை விட்டு வெளியேறியோரில் ஆண்களின் வீதம் ஒருசில வருடங்களில் கூடி குறைந்தாலும் ஒட்டுமொத்த கணக்கெடுப்பின் அடிப்படையில் பெண்களை விட அதிக வீதத்தையே வெளிப்படுத்துகின்றது.

எவ்வாறாயினும் 2021 ஆம் ஆண்டில் நாட்டை விட்டு வெளியேறும் பெண்களின் வீதம் அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகின்றது.

இதன் அடிப்படையில் 2022 ஆம் ஆண்டில் வேலை நிமித்தம் நாட்டை விட்டு வெளியேறியவர்களில் 40 வீதமானோர் பெண்கள் (கடந்த வருடத்தை விட 7 வீத அதிகரிப்பு) என பதிவாகியுள்ளது.

இவர்களில் 60 வீதமானோர் வீட்டு பராமரிப்பு உதவியாளர்களாவும் 30 வீதமானோர் குறைந்தளவு மூளையை பயன்படுத்த கூடிய தொழில்களுக்காகவும் 1.08 வீதமானோர் நடுத்தர தொழில்களுக்காகவும் வெளியேறி உள்ளனர் எனவும் 1.18 வீதமானோர் சிறந்த தொழில் தகைமை கொண்டவர்கள் எனவும் 5.5 வீதமானோர் நிபுணத்துவம் பெற்றவர்கள் எனவும் 2 வீதமானோர் அலுவலக பணிகளுடன் தொடர்புபட்டவர்கள் எனவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இதேநேரம் நாட்டை விட்டு வெளியேறிய ஆண்களின் வீதம் 2021 ஆம் ஆண்டில் 67 வீதமாக இருந்த நிலையில் 2022 ஆம் ஆண்டில் 60 வீதம் ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles