வெளிநாட்டு முட்டைகளைக் கொண்டு வாருங்கள்

முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான பரிந்துரையை வழங்கவில்லை என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் முன்வைத்த வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

பறவைக் காய்ச்சல் காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய பரிந்துரைகளை வழங்க முடியாது என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமலி கொத்தலாவல அண்மையில் தெரிவித்திருந்தார்.

ஆனால் உரிய ஆய்வுக்குப் பின்னரே இவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் செயலாளர் அனுரசிறி மாரசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி, இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நாடுகளிடம் அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் என்றார்.

முட்டைகளை இறக்குமதி செய்யும் போது கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறையின் அனுமதி கட்டாயம் என வர்த்தகத் துறை தெரிவித்துள்ளது. விலங்கு நோய்கள் சட்டத்தின்படி, சம்பந்தப்பட்ட நாட்டில் 6 மாதங்களுக்கு முன்பு பறவைக் காய்ச்சல் இல்லை என்று உறுதி செய்யப்பட்டால் மட்டுமே முட்டை, குஞ்சுகள், கோழி இறைச்சி மற்றும் அது சார்ந்த பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும். அது தொடர்பான சான்றிதழை சம்பந்தப்பட்ட நாடுகள் இலங்கைக்கும் வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles