” மனுசக்தி ” எனும் தொனிபொருளின்கீழ் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் நுவரெலியா மாவட்டத்திற்கான கிளை நுவரெலியா மாவட்ட செயலகத்தின் ஐந்தாவது மாடியில் (07.01.2024) இன்று காலை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ்க நாணயக்கார கலந்துக்கொண்டு பணியகத்தை சமய அனுஸ்டானங்களுடன் நாடா வெட்டி திறந்து வைத்தார்.
கடந்த டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற புலம்பெயந்தோர் தினத்தில் பிரிடோ நிறுவன சிறுவர் கழக உறுப்பினர்கள் அமைச்சரிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைச்சரினால் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கமைய இந்த பணியகம் திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதுவரை காலமும் நுவரெலியா வாழ் மக்கள் கண்டி, கொழும்பு என அலைந்து, சிரமப்பட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான சேவைகளை பெற்று வந்தனர் இந்த நிலையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஒர் அங்கீகாரம் வழங்கப்பட்டு நுவரெலியாவில் இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிளை பணிமனை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.