வெள்ளவத்தை கடற்கரையில் இரு சடலங்கள் மீட்பு!

வௌ்ளவத்தை கடற்கரையில் அடையாளம் காணப்படாத இரண்டு ஆண்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வௌ்ளவத்தை பிரதான வீதிக்கு அருகாமையிலுள்ள கடற்கரையில் மிதந்த நிலையில் முதலாவது சடலம் பொலிஸாரினால் இன்று மீட்கப்பட்டது.

பின்னர், முதலாவது சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்திலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவிலுள்ள வெள்ளவத்தை இராமகிருஷ்ணா ஒழுங்கைக்கு அருகிலுள்ள கடற்கரையில் மற்றுமொரு ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இரண்டாவதாக கண்டுபிடிக்கப்பட்ட சடலத்தின் அருகில் கத்திகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles