‘வேட்டையாடுகிறது அரசு’ – சி.ஐ.டி. வளாகத்தில் சீறிய பொன்சேகா!

எதிரணி உறுப்பினர்களை அரசியல் ரீதியில் பழிவாங்கும் நடவடிக்கைக்கே தற்போதைய அரசு முன்னுரிமை வழங்கியுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட்மார்ஷ் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

அசோக அபேசிங்க எம்.பியுடன் நேற்று சி.ஐ.டி. வளாகத்துக்கு வருகை தந்திருந்த பொன்சேகா, ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு கூறினார்.

” 21/4 தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் பலகோணங்களில் கருத்துகள் வெளியிடப்பட்டுவருகின்றன. குறித்த அறிக்கை தொடர்பில் மக்கள் மத்தியில் திருப்தி இல்லை. தாக்குதலின் பின்னணி என்ன, பிரதான சூத்திரதாரி யார் என்பதனை கண்டறிய வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே மக்கள் இருக்கின்றனர்.

சமூகவலைத்தளங்களில் கருத்துகள் வெளிவருகின்றன. ஊடகங்களிலும் வெளியாகின்றன. அந்த வகையிலேயே அசோக அபேசிங்கவும் கருத்து வெளியிட்டுள்ளார். அதனை சல்லலையிடுவதற்கு தயாராகிவருகின்றனர் என்பது புலனாகின்றது. எதிரணி அரசியல்வாதிகளை இவ்வாறு இரவு, பகலாக விசாரணைக்கு அழைத்து, அரசியல் இலாபம் தேடுவதற்கு அரசு முயற்சிக்கின்றது.

எதிரணி உறுப்பினர்களை பழிதீர்ப்பதற்கே அரசு முன்னுரிமை வழங்கிவருகின்றது. நாட்டை கட்டியெழுப்ப முன்னுரிமை வழங்கப்படுவதில்லை. நாம் சிறைக்கு செல்வதற்குகூட அஞ்சமாட்டோம்.” – என்றார்.

Related Articles

Latest Articles