” வேண்டாம், வேண்டாம் மதுபானசாலை வேண்டாம் – டிக்கோயா, ஓட்டரி பகுதி மக்கள் போராட்டம்

நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட டிக்கோயா, சலங்கந்தை – ஒட்டரி பிரிவில் மதுபானசாலை அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று போராட்டமும், பேரணியும் முன்னெடுக்கப்பட்டது.

ஆன்மீக தலைவர்கள், இளைஞர்கள், ஊர் மக்கள் இணைந்தே இப்போராட்டத்தை முன்னெடுத்தனர்.

மதுபானசாலைக்கான அனுமதியை இரத்து செய், வேண்டாம், வேண்டாம் மதுபானசாலை வேண்டாம் என கோஷங்களை எழுப்பியவாறு ஒட்டரி பகுதியில் இருந்து டிக்கோயா நகர்வரை மக்கள் பேரணியாக வந்தனர்.

” மலையகம் தற்போதுதான் மாற்றம் கண்டு வருகின்றது. எமது சமூகமாற்றத்துக்கு இந்த மதுபானசாலைகள் பெரும் தடையாக உள்ளன. எனவே, எமது பகுதிக்கு மதுபானசாலை வேண்டாம்.” – என இளைஞர்கள் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles