வேலுகுமார் எம்.பிக்கு பாராளுமன்றில் மற்றுமொரு உயர் பதவி!

சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் புதிய தலைவராகப் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன ) தெரிவுசெய்யப்பட்டார்.

இவருடைய பெயரைப் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் கின்ஸ் நெல்சன் வழிமொழிந்தார்.

இதன் இணை உப தலைவர் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியகலாநிதி) சுதர்ஷினி பெர்னாந்துபுள்ளே நியமிக்கப்பட்டதுடன், இவருடைய பெயரை ரோஹினி கவிரத்ன முன்மொழிந்ததுடன், கின்ஸ் நெல்சன் வழிமொழிந்தார்.

மற்றுமொரு இணை உபதலைவராக பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் நியமிக்கப்பட்டார்.

இவருடைய பெயரை பாராளுமன்ற உறுப்பினர் கின்ஸ் நெல்சன் முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அஷோக அபேசிங்க வழிமொழிந்தார்.

இலங்கையிலுள்ள சிறுவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களைத் தொடர்புபடுத்தி சிறுவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உருவாக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் நேற்று (21) ஒன்பதாவது பாராளுமன்றத்தில் முதல் தடவையாகக் கூடியபோதே இந்த நியமனங்கள் இடம்பெற்றன.

இக்கூட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஒன்றியத்தின் செயலாளரும், பாராளுமன்றப் பணியாட் தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹனதீர, இந்த ஒன்றியம் ஏழாவது பாராளுமன்றத்தில் உருவாக்கப்பட்டிருந்ததுடன், எட்டாவது பாராளுமன்றத்தில் வெற்றிகரமாகச் செயற்பட்டிருந்ததாகக் கூறினார்.

சிறுவர்களின் நல்வாழ்வுக்கான கொள்கைகளை மாற்றம் செய்வது அல்லது புதிய கொள்கைகளை அறிமுகப்படுத்துவது மற்றும் சகல சிறுவர்களினதும் நல்வாழ்வு குறித்த கொள்கைகளை தொடர்ந்தும் மறுஆய்வு செய்வது, சிறுவர்களுக்காகப் பணியாற்றும் பல்வேறு அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் இணைந்து செயற்படுவது மற்றும் சிறுவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் குறித்து அரசாங்க நிறுவனங்கள் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கச் செய்வது என்பன இந்த ஒன்றியத்தின் பிரதான நோக்கங்களாகும் எனப் பிரதிச் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்துடன் இணைந்து தொடர்ந்தும் செயற்பட எதிர்பார்த்திருப்பதாக இதில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஒன்றியத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான முன்மொழிவுகளை அடுத்த கூட்ட தினத்தில் முன்வைக்க முடியும் எனப் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக தெரிவித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles