தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார்மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் எஸ். செல்லமுத்துவின் ஆதரவாளர்களே இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர் என வேலுகுமார் எம்.பியின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புசல்லாவை, அருள்மிகு ஸ்ரீ மஹா கணபதி ஆலயத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றுவிட்டு, அடுத்த நிகழ்வொன்றுக்காக வேலுகுமார் எம்.பி. சென்றிருந்தவேளையே, புசல்லாவை நகரில் வைத்து தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில் இதொகாவின் உப செயலாளர் செல்லத்துவை தொடர்புகொண்டு, அவர் தரப்பு கருத்தை பெறுவதற்கு பல தடவைகள் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தினாலும் முயற்சி பலனளிக்கவில்லை.
