ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமாரின் பெயரை சபைக்கு தலைமை வகித்த சுரேன் ராகவன் எம்.பி தவறாக அறிவித்ததால் நேற்று சபையில் குழப்ப நிலை உருவானது.

நேற்று பாராளுமன்றத்தில் செல்வராசா கஜேந்திரன் உரையாற்றினார். அவரை தொடர்ந்து வேலு குமார உரையாற்றுவார் என சபைக்கு தலைமை வகித்த சுரேன் ராகவன் எம்.பி அறிவித்தார். தனது பெயர் வேலு குமார அல்ல என வேலு குமார் எம்.பி தெரிவித்தார். இதனையடுத்து அவரின் பெயரை திருத்தி அறிவித்த சுரேன் ராகவன் எம்.பி, ‘கௌரவ வேலுகுமார் எம்.பி’ என உச்சரித்தார். அதனை தொடர்ந்து வேலு குமார் எம்.பி உரையாற்றினார்.
