வைத்தியர் ஜயருவன் பண்டார இன்று (31) குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அரச மருந்தாக்க கூட்டுத்தாபனத்தின் தலைவரின் முறைப்பாட்டிற்கு அமைய வைத்தியர் அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடக நேர்காணல் ஒன்றின்போது தெரிவித்த கருத்துகள் சம்பந்தமாகவே இதன்போது வாக்குமூலம் பெறப்பாடலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
கொரோனா வைரஸ் தாக்கத்தின் முலாவது மற்றும் 2ஆவது அலைகளின்போது சுகாதார அமைச்சில் முக்கிய பதவிகளை வகித்திருந்த ஜயருவான் பண்டார, அதன்பின்னர் மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.