ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
“ஊழல் மிக்க ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனத்தின் தலைவர் உட்பட அதிகாரிகளை நீக்குதல்” எனும் தலைப்பில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆகியன ஒன்றிணைந்து முன்வைத்த பிரேரணைமீதான விவாதம் சபையில் இன்று காலை முதல் மாலைவரை நடைபெற்றது.
விவாதத்தின் முடிவில் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது என சபாநாயகர் அறிவித்தார்.
