ஷிரந்தி ராஜபக்சவுக்கு விளக்கமறியல்!

 

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் (CIABOC) கைது செய்யப்பட்ட ஷிரந்தி ராஜபக்ச , கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்த பின்னர், புதன்கிழமை (7) காலை CIABOC அதிகாரிகளால் ஷிரந்தி ராஜபக்சஷ கைது செய்யப்பட்டார்.

அரசு வங்கி ஒன்றிலிருந்து ரூ. 10 மில்லியனை பெற்றுத் தவறாகப் பயன்படுத்தியமை, அதன்மூலம் பொதுச் சொத்துச் சட்டம் மற்றும் ஊழல் தடுப்புச் சட்ட விதிகளின் கீழ் குற்றமிழைத்தமை தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக லஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles