ஹட்டனில் இருந்து அதிகாலையில் கொழும்பு செல்ல நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை…!

ஹட்டனில் இருந்து அதிகாலை வேளையில் கொழும்பு நோக்கி புறப்படும் பஸ்களுக்கு முன் கூட்டியே ஆசன ஒதுக்கீடு செய்வதற்கான வசதிகள் செய்து தருவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

ஹட்டன், நோர்வூட், டிக்கோயா கொட்டகலை உள்ளிட்ட பல பிரதேசங்களிலிருந்து கொழும்புக்கு பலர் செல்கின்றனர்.

இவர்கள் அதிகாலை செல்லும் 1.30 மற்றும் 3.15 ஆகிய பஸ்களுக்கு செல்வதற்காக இரண்டு மூன்று மணித்தியாலங்கள் வரிசையில் நின்று செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அதிகமான நேரம் வரிசையில் நிற்பதற்கே செலவிட வேண்டியுள்ளதாகவும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.

அவ்வாறு பல மணித்தியாலங்கள் வரிசையில் நின்றும் ஆசனங்கள் இன்றி உரிய நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படுவதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் ஹட்டனிலிருந்து செலவதற்கான இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் ஆசன ஒதுக்கீடு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தால் பயணிகள் எவ்வித அசௌகரியங்களும் இன்றி முன் கூட்டியே தங்களது ஆசனங்களை ஒதுக்கி கொள்வார்கள் என்றும் இதனால் நேரமும் பணமும் வீண் விரையம் ஆவதனை தடுக்கலாம் எனவும் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

மலைவாஞ்ஞன்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles