ஹட்டனில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மூதாட்டி திடீர் மரணம்!

ஹட்டன் டன்பார்க் தோட்டத்தில் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டிருந்த வயோதிப பெண்ணொருவர் இன்று (29.11.2020) மாலை திடீரென உயிரிழந்துள்ளார்.

ஒரு பிள்ளையின் தாயான 84 வயதுடைய வயோதிப பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த மூதாட்டியின் பேரபிள்ளை அண்மையில் கொழும்பில் இருந்து இங்கு வந்துள்ளார்.

இதனையடுத்து அவரும் அவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் நால்வருமாக மொத்தம் 9 பேரை சுய தனிமைக்கு உட்படுத்த சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இந்நிலையிலேயே வயோதிப் பெண் இன்று மாலை திடீரென உயிரிழந்துள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles