ஹட்டன் ஆரியகம பகுதியிலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தால் வயோதிபப் பெண்ணொருவர் இன்று (24) பிற்பகல் பலியாகியுள்ளார்.
நாட்பட்ட நோயினால் பீடிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்த ஓய்வு பெற்ற 74 வயதுடைய ஆசிரியை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் மூன்று பிள்ளைகளின் தாயாவார்.
வீட்டில் இருந்தவர்கள் நத்தார் பண்டிகையை முன்னிட்டு பொருட்களை கொள்வனவு செய்வதற்காக நகருக்கு சென்றிருந்தவேளையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
அயலில் இருந்தவர்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தாலும், மூதாட்டி உயிரிழந்துவிட்டார்.பொலிஸ் விசாரணைகள் தொடர்கின்றன.
