கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 7 ஆண்களும், மூன்று பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதன்படி கொரோனா வைரஸ் தாக்கத்தால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 445 ஆக அதிகரித்துள்ளது.
ஹட்டன் பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய ஆணொருவரும் உயிரிழந்துள்ளார்.
அதேவேளை, இன்று மாத்திரம் 518 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


