ஹட்டன் கல்வி வலயத்தில் 247 மாணவர்கள் O/L பரீட்சை எழுதவரவில்லை

ஹட்டன் கல்வி வலயத்தில் இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் வருகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

பரீட்சைக்கான விசேட பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வரும் உயர் அதிகாரியொருவர் இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.

ஹட்டன் வலயத்தில் மொத்தமாக 3,627 பாடசாலை பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றும் போதிலும் அதில் சுமார் 247 மாணவர்கள் இன்றைய தினம் பரீட்சைக்கு சமூகமளிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மொத்தமாக 290 தனிப்பட்ட பரீட்சார்த்திகள் பரீட்சையில் தோற்றும் நிலையில் இன்றைய தினம் 95 பரீட்சார்த்திகள் பரீட்சையில் தோற்றவில்லை என பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து அல்லது வேறு என்ன காரணங்களினால் இவர்கள் இன்றைய பரீட்சைக்குத் தோற்றவில்லை என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.

Related Articles

Latest Articles