ஹட்டன், குடாகம பகுதியில் விபத்து: ஒருவர் காயம்!

ஹட்டன், நுவரெலியா பிரதான வீதியில் குடாகம பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பருடன், லொறியொன்று மோதி விபத்துக்குள்ளானது.

இதில் லொறியின் உதவியாளர் காயமடைந்துள்ளார். அவர் டிக்கோயா, கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்து நேற்று 17.06.2025 இரவு 09.30 மணியளவில் இடம் பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குடாகம பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த லொறியின் சாரதி,  சாரதி மது போதையில் லொறியை செலுத்தியுள்ளார் எனக் கூறப்படுகின்றது. அவர் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சதீஸ்

Related Articles

Latest Articles