ஹட்டன், செனன் பகுதியில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செனன் தேயிலை தோட்டத்திலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று (03) மீட்கப்பட்டுள்ளது என்று ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் செனன் தோட்டத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான ராமையா மனோகர் (வயது 46) என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

இவர் ஹட்டன் இ.போ.ச டிப்போவில் பணிபுரிந்து வருவதாகவும், நான்கு நாட்களாக பணிக்கு சமூகமளிக்கவில்லை எனவும் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் டி- கொழும்பு பிரதான வீதியில் ஹட்டன் செனன் தோட்டத்திற்கு அருகில் ஹட்டன் ஓயாவில் பாயும் ஆற்றுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சடலத்தை ஹட்டன் நீதவான் பரிசோதித்ததன் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா வைத்தியாசாலைக்குச் கொண்டுச்செல்லப்படவுள்ளதாக தெரிவித்த ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கௌசல்வா, செதி பெருமாள்

Related Articles

Latest Articles