ஹட்டன் – டிக்கோயா பகுதியில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா!

ஹட்டன், டிக்கோயா நகரசபை பிரிவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகின்றது.  சுகாதார நடைமுறைகளை மக்கள் உரிய வகையில் பின்பற்றாமையே இதற்கு பிரதான காரணம் என சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

குறித்த பகுதியில் கடந்த தினங்களில் மேற்கொண்ட 43 பிசிஆர் பரிசோதனையில் 30 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் டிக்கோயா நகரசபையின் பொது சுகாதார பரிசோதகர் ராமையா பாலகிருஸ்ணன் தெரிவித்தார்.

இதில் இரு குடும்பங்களைச் சேர்ந்த 14 பேருக்கும், தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் டிம்புல்ல, தும்புறுகிரிய, பண்டாரநாயக்க டவுன், புரூட்யில் , தரவலை கீழ்பிரிவு ,எம்.ஆர் டவுன், காமினிபுர ஆகிய பகுதிகளிலிருந்து சுமார் 30 பேர் தொற்றாளர்களாக இதுவரை இனங்காணப்பட்டுள்ளதாகவும். அவர்களுடன் நெருக்கமான உறவுகனை பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கே. சுந்தரலிங்கம், ஹட்டன்

Related Articles

Latest Articles