ஹட்டன் நகர சபைக்கு உரித்தான பஸ் தரிப்பிடத்தில் உள்ள பொது கழிப்பறை பகுதியில் கழிவு நீர் கசிந்து வருகிறது. இதனால் தனியார் பஸ் தரிப்பிட பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
இந்தத் தரிப்பிட பகுதியில் தனியார் பஸ்கள் அதன் சாரதிகள், நடத்துநர்கள், பயணிகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பாதசாரிகள் என பல்வேறு மக்கள் கூடுகின்றனர். இந்த கழிவறை மூலம் நாளாந்தம் பல ஆயிரம் ரூபா ஹட்டன் நகர சபைக்கு வருமானம் வந்த வண்ணம் உள்ளது.
இருந்த போதும் இந்தக் கழிவறை கழிவு நீர் கசிவை கட்டுபடுத்த முடியாத நிலையில் ஹட்டன் நகர சபை உள்ளது. அதன் செயலாளர் மற்றும் சுற்றுச் சூழல் அதிகாரிகள் உடன் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
செதி பெருமாள்
