‘மலையக பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட ஹட்டன் பிரகடனம் நிச்சயம் நிறைவேற்றப்படும்.
மலையக மக்கள் எதிர்நோக்கும் காணி மற்றும் வீட்டுப் பிரச்சினைக்கு எமது ஆட்சியில் தீர்வு காணப்படும். இதற்கு இந்தியா வழங்கிவரும் ஒத்துழைப்புக்கு நன்றிகள்.
தனி வீடொன்றை அமைக்க இந்தியா 28 லட்சம் ரூபா வழங்குகின்றது. உட்கட்டமைப்புக்கு இலங்கை 4 லட்சம் ரூபா வழங்குகின்றது. அந்த வகையில் ஒரு தனி வீட்டுக்கு 32 இலட்சம் ரூபா ஒதுக்கப்படுகின்றது. 10 பேர்ச்சஸ் காணியும் வழங்கப்படும். ”
இவ்வாறு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.