ஹட்டன் புகையிரத நிலைய அபிவிருத்தி திட்டத்தின்கீழ் நிர்மாணிக்கப்பட்ட கட்டடம் குறித்து ஆராய்வு!

ஹட்டன் புகையிரத நிலைய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட கட்டடம் இரண்டு வருடங்களாகப் பயன்படுத்தப்படாமை தொடர்பில் சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.

அதற்கமைய அத்தகைய திட்டங்களிலிருந்து அதிகபட்ச நன்மைகளைப் பெறுவதற்கு, சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களும் சிறந்த ஒருங்கிணைப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் தற்போதுள்ள பிரச்சினைகளைத் தீர்க்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் குழு வலியுறுத்தியது.

சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அஜித் மான்னப்பெரும தலைமையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் இதற்கு முன்னர் கருத்திற்கொள்ளப்பட்ட, நகர அபிவிருத்தி அதிகாரசபையால் ஆரம்பிக்கப்பட்டு நிறுத்தப்பட்ட “சியத உயன” திட்டம், வெலிக்கடை சிறைச்சாலை திட்டம், ஹட்டன் புகையிரத நிலைய அபிவிருத்தித் திட்டங்கள் ஆகியவற்றின் தற்போதைய முன்னேற்றம் குறித்து மீளாய்வு செய்யப்பட்டது.

இந்தக் குழுக் கூட்டத்தில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு, நகர அபிவிருத்தி அதிகார சபை, சுற்றுலா மற்றும் காணி அமைச்சு, வீதி அபிவிருத்தி அதிகார சபை, அரசாங்க மதிப்பீட்டுத் திணைக்களம், இலங்கை புகையிரதத் திணைக்களம், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்குபற்றினர்.
இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜயந்த கெடகொட வைத்தியகலாநிதி திலக் ராஜபக்ஷ ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles